நில்லாதே செல்..

நில்லாதே செல்..
-----------------------------
வாழ்க்கை
ஒரு ஓட்டப்பந்தயம்
நீ விரும்பாத போதும்
வினோத பந்தயம்.

ஓடாமலே நின்று கொண்டிருந்தால்
எங்கு போவாய்?
எப்போது போவாய்?

நின்று கொண்டிருப்பவன்
நேரத்தைத்
தின்று கொண்டிருக்கிறான்.
சென்று கொண்டிருப்பவன்
வாழ்வை
வென்று கொண்டிருக்கிறான்.

செல்லவும் வேண்டும்
வெல்லவும் வேண்டும்.

வெல்வதென்றால்
வேகமும் வேண்டும்
வீழாதிருக்கும்
விழிப்புணர்வும் வேண்டும்.
விழுகின்ற போதெல்லாம்
எழுகின்ற வீம்பும் வேண்டும்

உன்னிடம் உண்டா?

உண்டென்றால்
உனக்கும் உண்டு
பரிசு...பதக்கம்...பாராட்டு...

எழுதியவர் : Anbuselvan (10-Apr-13, 1:39 am)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 193

மேலே