வெற்றி நிச்சயம்..
வெற்றி நிச்சயம்..
-------------------------------
முன்னேறும் உரிமை
என்னோடு பிறந்தது.
இந்த முழக்கம்
என் மூச்சோடு
கலந்தது
அழுது புலம்பப்
பிறந்தவனில்லை நான்.
அடைந்து அனுபவிக்க
அவதரித்தவன்.
பொழுது போக்கப்
புறப்பட்டவனில்லை நான் .
புலிநகம் பிடுங்கப்
புறப்பட்டவன்.
எலிநகங்கள்
ஏற்படுத்தும்
சிருரணங்கள்
என்னைச்
சிதைக்க முடியாது.
திருடர்கள்
எழுதுகின்ற
தீர்ப்புகளால்
தீய்ந்து போகும்
நிரபராதி நானில்லை.
குருடர்கள்
காணாததால்
திறமைகளைக்
கொளுத்துகின்ற
கோமாளி நானில்லை.
முரடர்கள்
எடுக்கும்
முடிவுகளுக்கு
முடிதாழ்த்தி
முடங்குபவன் நானில்லை
நான் மட்டுமல்ல;
தன்னம்பிக்கை
கொண்ட எவருமே
தாழ்ந்து கிடந்ததில்லை
சரியாத நம்பிக்கை
சலியாத உழைப்பு
சமமாய்க் கொண்டவன் நான்
துணிவு என்னும் தோழனை
துணையாய்க் கொண்டவன் நான்
இலட்சியப் பயணத்தில்
இறங்கியவன் நான்
இப்படிப்பட்ட நான்
இப்படிப்பட்ட நீ
இப்படிப்பட்ட அவன்
நமக்கு...
வெற்றி நிச்சயம்
வெற்றி நிச்சயம்...

