எல்லாமே நீ தான்

சுத்தம் தேடி திரிகிறாய்
நீ ஒரு அசுத்தம் என்பதை
மறந்து விட்டு...

சொர்க்கத்தை அடைய விரும்புகிறாய்
நீ ஒரு நரகம்
என்பதை உணராமல்....

ஊருக்கு புத்திமதி கூறுகிறாய்
நீ ஒரு போலி வாழ்க்கை
வாழ்த்து கொண்டு...

புன்னகை பூக்க வேண்டுகிறாய்
நீ ஒரு கனத்த
கோபம் கொண்டு....

பொழுது போகவில்லை என்கிறாய்
நீ ஒரு வெட்டியாக
இருந்து கொண்டு...

எதுவும் மாறவில்லை என்கிறாய்
இறைவனே வந்தாலும் நீ
திருந்த மறுக்கிறாய்...


எல்லாமே நீ தான்
உன்னில் இருந்து தொடங்கட்டும்
ஒரு புது மாற்றம்....

எழுதியவர் : சிவானந்தம் (9-Apr-13, 11:13 pm)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : ellaame nee thaan
பார்வை : 180

மேலே