மன்னிப்பு எனும் ஒரு வார்த்தை..
பிணமாய் கிடப்பவன் முன்நின்று
ஒருவன் அழுதவாறு சொன்னானாம்..
"என்னை மன்னித்துவிடு..
நான் உன்னை தெரியாமல்
கொன்றுவிட்டேன்"
என்று..
இப்படிதானே நாம்
பல உயிர்களையும்..
இதயங்களையும் கொன்றுவிட்டு..
மன்னிப்பு என்ற
ஒரு வார்த்தையை
மிகச்சுலபமாக சொல்லிச் செல்கிறோம்..
பாதிக்கப்பட்டோர் நிலை
என்ன என்று யோசித்ததாகவும்
தெரியவில்லையே..
மனிதன் தான் இருக்கிரானேயன்றி..
அவனுள் மனிதம்
மறித்து அல்லவா கிடக்கிறது!

