தோழியே மன்னிக்க வேண்டுகிறேன் ஒருமுறை 555

தோழியே...

என்னை மன்னிக்க
மாட்டாயா ஒருமுறை...

என் தவறினை
எண்ணி வருந்துகிறேன்...

ஒருமுறை மன்னித்து
ஏற்பாயா என்னை...

அறியாமல் செய்த
என் தவறினை உணர்ந்து...

உன்னிடம் மன்னிப்பு
கேட்கும் மழலை...

மன்னிக்க
மாட்டாயா தோழி...

என் உயிர் தோழியே...

இவ்வுலகில் எந்த
உறவும் இல்லாமல்...

நான் வாழ்ந்துவிடுவேன்...

நட்பெனும் உறவு
இல்லாமல்...

வாழ மட்டும்
இல்லை...


ஒருமுறை சுவாசிக்க
கூட விரும்பவில்லை...

மரித்துவிட சொல்
மறித்து விடுகிறேன்...

நட்பு என்னும்
உறவு இல்லை என்று
சொல்லிவிடாதே...

அந்த கணமே நான்
செத்துவிடுவேன் தோழி...

ரத்த உறவுகள் என்னை
வெறுத்த போதுகூட...

நான் கலங்கவில்லை...

என்னை வெறுத்துவிடாதே
தோழி...

என்னை மன்னித்து
ஏற்றுகொள்ள மாட்டாயா...

எனக்கு மன்னிப்பே
கிடையாத...

என்னை நீ மன்னிக்க
நான் என்ன செய்யவேண்டும்...

என் உயிரையும்
துறக்க துணிந்துவிட்டேன்...

மன்னிவிட்டேன் என்று
ஒரு வார்த்தை உதிர்த்துவிடு...

என் தோழியே...

உறவுகள் மெல்ல மெல்ல
என்னை கொள்ள...

நீயும் உன் மௌனத்தால்
என்னை கொல்லாதே...

காற்றின் கோபம்
சூறாவளியாய் மாறுது...

கடலின் கோபம்
கொந்தளிப்பாய் மாறுது...

பூமியின் கோபம்
பூகம்பமாய் மாறுது...

உன் கோபம் மட்டும்
என்தோழி மௌனமாய்
என்னை கொல்லுது...

என்னை மன்னித்து ஏற்று
கொள்வாயா தோழி...

ஒருமுறை மன்னிதுவிடடி
என் தோழியே...

இனி ஒருபோதும் நான்
தவறு செய்ய மாட்டேன்...

என் உயிர் தோழியே
என்னை மன்னிக்க
வேண்டுகிறேன்...

ஒருமுறை...

கண்ணீருடன்
உன் தோழன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Apr-13, 3:24 pm)
பார்வை : 7463

மேலே