மனம் திறக்கிறேன் (அனுபவம் புதுமை - சிறுகதை)

மனம் திறக்கிறேன் (அனுபவம் புதுமை - சிறுகதை)


கோவை ,,,,,,,,, காந்திபுரம் நகர பேருந்து நிலையம் காலை 9 :௦௦ மணியளவில் ஜனார்த்தனன் பேருந்திற்காக காத்திருந்த நேரம்,,,,, ஞாயிற்று கிழமை வேறு

பரவலாக மனிதர்கள் அங்கும் இங்குமாய் அலை பாய்ந்து தங்கள் வேலைகளில் முழு மனதோடு ஈடு பட்டுகொண்டிருந்த நேரம் ,,,,,

நல்ல வெயில் நேரம்,,,,,,,,

சுப்பிரமணி நெடுஞ்சாலையை தாண்டி வருவதை கண்ட ஜனார்த்தனனுக்கு மனதில் சற்று சந்தோசம் கலந்த நிம்மதி " அப்பாடா இவன் காதலிக்கு ஹேன்ட் பேக் வாங்க இவ்வளவு நேரமா " என்றவனின் கண்ணில் தென்பட்டது 27B பேருந்து

சுப்ரமணியம் வந்து சேர்ந்த பின் இருவருமாய்,,,பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த வேளை,,,,,

பேருந்து நிலையத்தை ஒட்டி கிடக்கும் சாக்கடை நாற்றம் ,,,,,, கண்ணிழந்தவர்களின்
கூச்சல் நிறைந்த எச்சில் இரவின் பிச்சை எடுக்கும் பாடல் சத்தம்,,,, இதர பேருந்துகளின்
இரைச்சல்கள் நிறைந்த சங்கமம் ,,,,, காதல் ஜோடிகளின் பரிவட்டங்கள் ,,,,இளைய
சாம்ராஜ்யத்தின் கேலி கூத்துக்கள்,,,,
பெரியவர்களின் டீ கடை பெஞ்சின் வீண் வெட்டி
விவாதங்கள் என பேருந்து நிலையமே ,,,,,ஒரு வித்யாசமான மனநிலைகள் கொண்ட
மனிதர்கள் நிறைந்த கூட்டத்துடன் கலகலத்திருந்த அந்த காலை வேளை,,,,,

ஜனார்த்தனன் ஆரம்பித்தான் சுப்ரமணியிடம் "ஏன்டா உனக்கு வேறே பொழப்பே இல்லையாடா உன் லவர் ஹேன்ட் பேக் கேட்டான்றதுக்காக என்னை வெயில் ல நிக்கவச்சிட்டு போயி இவ்ளோ நேரம் கழிச்சி வர்றயே உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையாடா " என்று ,,,,

அதற்கு சுப்பிரமணி அவனிடம்
கேலியாக சிரித்து கொண்டே "தலை வலியும்,,காய்ச்சலும்,,,காதலும்,,,,அவ அவனுக்கு
வந்த தெரியும் டா",,,,என்று சொன்னான் ,,

அப்பொழுது ஜனார்த்தனன் "எனக்கு இந்த
கொடுமையெல்லாம் வரக்கூடாதுன்னு எப்போவுமே நா வேண்டிக்கிட்டே இருக்கேண்ட
எனக்கு உன்னோட இந்த அவஸ்தை வரவே வராதுடா என்று சற்று மென் கோபம் கொண்டு
தன் சீட்டிற்கு பக்கத்து சீட்டில் உள்ள பெரியவரிடம் "பெருசு கொஞ்சம் தள்ளி உக்காரு"
என சொல்லி அங்கே சென்று அமர்ந்துவிட்டிருந்தான் ,,,,,,,

சுப்ரமணியின் வாய் முகுர்த்தமோ என்னமோ தெரியவில்லை,,,

ஜனார்த்தனன்,,கண்ணசந்த வேளையில் ,,,
குளித்து முடித்த கூந்தலை லேசாக கட்டி முடித்த நிலையில் தலை தழும்ப மல்லிகையிட்ட நீல நிற இஸ்திரி இடாத சுடிதார் அணிந்த அந்த ஒரு தேவதை ,,

அவனின் தூக்கம் நிறைந்த மங்கிய கண்ணில் பட்டு மறைந்தவள் அதே பேருந்தில் முன்பாக சென்று முன்வாசல் வழியாக ஏறி அவள் முதுகு பக்கம் தெரிய நின்றாள் ,,,,,,,

ஜனார்த்தனன் கண்ணை அகல விரித்து அவளை முழுவதுமாய் பார்க்க முயற்சித்தான் ,,,,,,,
முடியவில்லை ,,,

,,,ஆனால் ,,,அவளை முழுமையாய் ,,,,,
அன்று நேசித்திருந்தான் அவளின் முகத்தை காணாமலும் கூட ,,,,

பேருந்து நகர தொடங்கிய நேரம் ,,,ஆட்கள் பரவலாக பேருந்தில் ஏற ஆரம்பித்தனர்,,,,
அதில் அவளும்,,அவனின் பார்வையில் இருந்து மறைக்கபட்டாள்,,,,

இருந்தும்,,,அவன் மனம்,,அவளிடமே,,,தஞ்சம் சென்றது ,,,அவளை மீண்டும் காண எண்ணியே
துடித்து சஞ்சலித்தது,,,,,அவன் மனதால்,,அவளை நினைத்து நினைத்து ஒருவழியாய் உறைந்து நின்றிருந்தான் ,,,,,,

அவளை தொடர எண்ணினான் ,,,

ஒருவழியாக,,,,மேட்டுப்பாளையம் சாலையில் தொப்பம்பட்டி பிரிவில் பேருந்து நின்றதையொட்டி அவளும் இறங்கி செல்ல தொடங்கினாள்,,,,

அவனும் போகமனமில்லாமல் அதே நிலையத்தில் சுப்ரமணிக்கு தெரியாமல்
இறங்கி சிறிது நேரம் அவள் போன பிறகு அவளை தொடர எண்ணி பஸ் ஸ்டாப்
அருகில் இருக்கும்,,,தேநீர் விடுதியில் நின்றிருந்தான் ,,,

மெதுவாய் அவளை ,,,பின் தொடர்ந்து சென்றான்,,,,,,சிறிது நேரத்தில் அவள் அவளின் வீட்டினுள் சென்று மறைந்திருந்தாள்,,,,,,

சிறிது நேரம் அவன் " ச்சே இப்படி பார்க்க முடியாமே போச்சே என்று கூறிய வேளை" அவள் உடைமாற்றி அவளின் வீட்டிற்கு எதிரில் உள்ள,,அடிபம்பில் தண்ணீர் எடுக்க வெளியே வந்த கணம் அவளை அவன் உற்று நோக்க நினைத்தும் முடியவில்லை ,,,ஏமாற்றத்தோடு அவன் மீண்டும் வீடு திரும்பினான் ,,,,,,

பின் மறுநாள் காலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனது நண்பர்களின் மூலம்,,
ஜனார்த்தனன் அவளின் முழு விவரங்களையும் சேகரித்து ,,அந்த நண்பர்களின் மூலமாகவே அவளிற்கு காதல் தூது விடுத்து ,,அதன் மூலம் வெற்றியும் கண்டிருந்தான் ,,,,,,சற்றும் அவளின் முகத்தை இன்னும் காணாத நிலையில் ,,,,,

அப்படியே அவர்களின் காதல் நண்பர்களின் மூலமே ,,,,,,,முகம் பார்க்காமல்,,,,,மரமாய் வளர்ந்து நின்ற தருணம்,,,,,

ஜனார்த்தனன் அவன் தந்தையிடம் "அப்பா நா இந்த மாதிரி தொப்பம்பட்டி பிரிவுல
இருக்கிற ,,சக்திவேல் கவுண்டர் ஓட பொண்ணு நித்யா வை காதலிக்கிறே ,,,அவளையே கல்யாணமும் செய்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்,,,ஆனா அவ எப்படி இருப்பான்னே தெரியாது,,,முதல் நாள் அவளை,,அப்படி பார்த்ததும் விரும்ப ஆரம்பிச்சுட்டேன் என்றான்"

அதற்க்கு அவனின் தந்தையும் தாயும் மறுக்காமல்,,,சம்மதம் தெரிவித்து விட்டு ,,,அந்த பெண்ணினை பெண்கேட்க,,,தொப்பம்பட்டி பிரிவில் சக்தி வேல் கவுண்டர் ய் காண சென்றார்கள் ,,,,,

பெண்வீட்டாரும் ,,,, சம்மதம் சொன்ன வேளை,,,சக்திவேல் கவுண்டர் ஜாதகத்தின்
மீது அபார நம்பிக்கை கொண்டவர்

ஜாதகம் பார்த்து முடிவு செய்யலாம்,,,,
என்றவர்,,,இருவரின் ஜாதகத்தையும் பார்த்தார்கள்,,,,,,எதிர்மறையாக அவர்களின் ஜாதகம் சொல்லியது,,, இத்திருமணம் நடந்தால் பெண்ணின்,,,,,,உயிருக்கு கண்டம் என இருந்ததால் ,,,,,

இருவீட்டருக்கும்,,,,இவர்கள்,,இருவருக்கும்,,மனசங்கடத்தில் இந்த காதல் சிக்கிகொண்ட நிலைதான் என்று கூட சொல்லலாம்,,,,

நிறைந்த வாக்குவாதங்களுக்கு பிறகு,,இரண்டு ஊராரும் சேர்ந்து ஒரு நல்ல நாளில் ,,,இந்த தீர்ப்பை,,,கடவுளிடமே ,,,,,,, விட ,,,,,முடிவும் செய்தனர் ,,,,,,,

ஒரு வெள்ளி கிழமை நாளில்,,,,,இரு ஊராரும் ,,,,ஜனார்த்தனனும் அவனின்,,நண்பர்களும் கூடியிருந்த வேளை ,,,

ஆஞ்சநேயர் கோவிலில்,,,,இரண்டு காகிதங்களில்,,,,,,,வெள்ளை மற்றும் சிகப்பு பூ முடித்து ஆண்டவன் சந்நிதியில் வைத்து விட்டு ,,,,,,, ஊர் முன்னிலையில் பெரியவர்கள் கூறியது ,,,,,

இந்த பூ நிறைந்த காகிதங்களில்,,,வெள்ளை நிற பூ வந்துவிட்டால்,,,ஆண்டவனின் சம்மதம்,,,,பரிபூரணமாய் இத்திருமணத்தை நடத்தலாம் ,,,மாறாக சிகப்பு பூ வந்து விட்டால் ,,,இத்திருமணம் அபத்தம் ,,,இரண்டு வீட்டாரும் சம்பந்தம் செய்து கொள்ள கூடாது எனும் மரபு ,,

ஒரு சிறு குழந்தையை அழைத்து ,,,,
ஆண்டவன் சந்நிதியில் இருக்கும் இரு காகிதங்களில்.,,,,,,ஒன்றை எடுக்க கூறிய நேரம்,,,

ஜனார்த்தனன் ,,,,பெருமிகையாக கடவுளை மன்றாடினான்,,,,,எப்படியாவது காதலின் மகத்துவத்தை ,,,இரு ஊராருக்கும் உணர்த்த வேண்டும் என்று ,,,,

ஆனால் அச்சிறு குழந்தை மாறுதலாக ,,,,சிகப்பு பூவை எடுத்து விட்டிருந்தது ,,,,,இதனால் இரு மனங்களும் ,,,இரு வீட்டாரும்,,,பிரிய நேரிய ,,,,,,,வலியான சம்பவம் நடந்துவிட்டது

"அவள் முகம் காணாது அவளை காதலித்த இவன் ,,,இறைவனிடம் ,,,இட்ட விண்ணப்பம் இது ஒன்றுதான் ,,,,,,,",,,என்னிடத்தில் உன் சக்தி மட்டும் இருந்திருந்தால் ,,,இவ்வுலகத்தில் பூத்த மற்றும் பூக்கும் மலர்கள் அனைத்தினையும் வெள்ளை நிறமாகவே மாற்றி படைத்திருப்பேன்
என்று ,,,,,,," நினைத்து விட்டு ,,,,,,வலிகள் மாறா ,,,,, அவளின் நினைவுகளோடு ஏக்கங்களையும் பாரங்களையும்,,,நெஞ்சில் சுமந்து கொண்டு ,,,,அவன் பாதையில் சென்று விட்டிருந்தான்,,,,,,,,

முற்றும்,,,,,,,,,,,,By ,,,,,,அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (10-Apr-13, 5:11 pm)
பார்வை : 315

மேலே