என்னை காதலி

அடியே காதலி...

எங்கு சென்றாயோ என்னவளே!
ஏங்கி தவிக்கிறேன் உறங்காமலே!!
உணவெல்லாம் மருந்தானதடி ,
உணர்வெல்லாம் மருலாடுதடி...

மருதாணியின் மகளே
மறு தாவணியின் பகலே
காதல் ஏரில் பூட்டி வைத்தாய்
ஆசை என்னும் விதைவிதைத்தாய்

கனவென்னும் நீரூற்றி
காதல் வேரூன்றி
வளரும் போது வெந்நீரூற்றினாய்

அடி கள்ளியே!!!!!!
உன் மனமெனும் உவர் நிலத்தில்
எருக்கு கூட வளராதடி!
பாலை மழையாக பொழிந்தாலும்
பாழாய்த் தான் போகிறது..

படர் மல்லியே படர்ந்துவிடு என்மேல்
ரத்தத்தை நீராக உற்றுகிறேன்
நிலம் குளிர,நீ வளர............

எழுதியவர் : Aanandhu (13-Apr-13, 4:19 am)
சேர்த்தது : Aanandhu
பார்வை : 112

மேலே