வருக புத்தாண்டே
பச்சை கம்பளம் எங்கும்
விரித்து இருக்க
கழனிகள் எங்கும்
நிரம்பி இருக்க
குழந்தைகள் விளையாட்டில்
குதூகலம் பொங்க
கன்னியர் கயல் விழிகள்
காதல் ரசம் பொழிய
காளையர் தோள்கள் வீரம்
விதைத்திட
பெரியோர் மனது மகிழ்ந்து
நிறைந்திட
எல்லாமும் நிறைந்திருக்க
எல்லோரும் மகிழ்ந்திருக்க
இருப்பவை எல்லாம் மேலும் பெருகிட
இல்லை என்பது இல்லாமல் போய்விட
உன்னை வருக வருக என வரவேற்கிறோம்
புத்தாண்டே

