என்னை தெரியுமா
வாழ்வினில் சமரசம் செய்வதை எதிர்பதால்
==========================நான் நம்பிக்கை
வீழ்ச்சி எப்போதும் என்னை துரத்துவதால்
============================நான் வெற்றி
அஞ்சினாலும் அடிகளை முன் எடுத்து வைப்பதால்
============================நான் தைரியம்
மற்றவர்களோடு என்னை ஒப்பிடாமல் இருப்பதால்
=========================நான் தனித்துவம்
தாய்மையை கண்டு தலை வணங்குவதால்
=========================நான் ஆண்மை
என்னைப்பற்றி நானே விமர்சித்துகொள்வதால்
===========================நான் நேர்மை
பாதகத்தை எல்லாம் எனது சாதகமாக மாற்றுவதால்
===========================நான் தந்திரம்
கற்றதை மேற்கோள் காட்டாது வாதிடுவதால்
===========================நான் தர்க்கம்
ஏழ்மையை கண்டு மனம் இறங்காததால்
=========================நான் கருணை
தவறினை கண்டு மனம் இறங்குவதால்
======================== நான் தர்மம்
இயற்கையோடு அதிகம் பேசிட நினைப்பதால்
========================= நான் மௌனம்
அனைத்துயிரையும் நேசிக்க நினைப்பதால்
=========================நான் அஹிம்சை
மரணத்தை கண்டு ஏளனம் செய்வதால்
===========================நான் வாழ்வு
இறைவனோடு என்னை இணைக்க நினைப்பதால்
==========================நான் புதுமை
அடுத்தவர் உள்ளத்தில் இடம் பிடித்திட நினைப்பதால்
===========================நான் நட்பு
நன்மைக்காய் பொய்மையை போற்ற துடிப்பதால்
===========================நான் சத்தியம்

