♥ அதுதான் அதிசயம் ♥

நட்சத்திரம் ஆற்றில் விழுந்தால்
அது ஒரு அதிசயம் இல்லையடி -ஒரு
கட்டிடம் வானில் கட்டி வைத்தால்
அதும் அதிசயம் இல்லையடி !!!

தொங்கும் தோட்டம் கழன்று விழுந்தால்
அதும் அதிசயம் இல்லையடி- அலை
பொங்கும் கடலில் அலைகள் மறைந்தால்
அதும் அதிசயம் இல்லையடி !!!

ஆடும் மாடும் மாமிசம் உண்டால்
அது ஒரு அதிசயம் இல்லையடி- ஒரு
ஓடம் தரையில் ஓடும் என்றால்
அதும் அதிசயம் இல்லையடி !!!

புள்ளி வைத்த கோலங்கள்
புவியில் அதிசயம் இல்லையடி-உன்
உள்ளம் என்னை விரும்பவோதொன்றே
உலகின் மாபெரும் அதிசயமடி!!!!

எழுதியவர் : கா மணி சாரோ (14-Apr-13, 10:29 pm)
சேர்த்தது : மணி
பார்வை : 139

மேலே