நீ விதை அல்ல!

வற்றிப்போன
என் மார்பில்
இரத்தம்கூட இல்லையடி..
என் மடியில்
நீ பிறந்தது - உன்
முன்ஜென்ம பாவமடி..
மண்ணில்,
உணவின்றி
உயிர் துறந்தாய்..
மண்ணுக்கு,
உயிர் துறந்து
உணவானாய்..
இந்த மண்ணில்
வாழ்பவர் - துரதிஷ்டசாலி!
இறப்பவர் - அதிஷ்டசாலி!
எங்கள் விதி
மாறும்வரை,
மண்ணோடு கலந்திரு!
விதையாகிவிடாதே!!