காதல் பார்வை..

பட்டுத் தெறிக்கும் உன் பார்வை,
நொடியொன்று
விட்டுத் துடிக்குதடி என்னிதயம்..

இதழ்கள் கொள்ளும் போரில்
இரவுகள் கழிந்திருக்க,
இச்சை கொண்ட இதயம்
நாணப் போர்வையில் ஒழிந்திருக்க,
கனவுகளில் நாளும்,
நமைக் காண்கிறேன் எந்நாளும்..

இதழ்கள் பேச வார்த்தை இராது,
நம் விழிகள் நான்கும் பேசி விடின்,
விழியின் மொழியோ செவி அறியாது,
பார்வை மொழி அதற்கு என்றும் புரியாது..

உன் ஓரப் பார்வை
ஓராயிரம் கதைகள் சொல்ல,
நேராய் நீ பார்த்தாலோ
நெருடிய எண்ணங்கள் நெஞ்சுக்குள் ஓட,
தொலைந்த எனைத் தேடுகிறேன்,
எனை ஒழித்து வைத்த உன்னுள் வந்து..

வெட்கப் பார்வை வீசியபடி,
வருடுகிறாய் என் இமையைத் தொட்டு..
விக்கல் பார்வை எனதானதே,
திக்கி முக்கி நிற்கிறேன் உன்னழகைக் கண்டு..

அவள் முத்தப் பார்வை
என் மோகந்தனைக் களைய,
என் மொத்தப் பார்வையையும்
ஈர்த்தபடி அவளிருக்க,
அவள் கிட்டப் பார்வை காட்டிவிட்டால்,
எட்டிப் பார்க்கும் என் குட்டி இதயம்..

உன் கன்னிப் பார்வை
என் கனவில் தினம் வர,
கடைக்கண் பார்வையில்
எனைத் தள்ளிவிட்டுக் கொல்ல,
புருவம் உயர்த்தி பார்வை நீ பார்த்தால்,
உருவகம் எங்கு தேட அதை நான் சொல்ல..

பார்வை ஒவ்வொன்றாய் நீ பார்க்க,
"என்ன பாவை இவளென்று!!" நான் வேர்க்க,
காதல் பார்வை பார்த்துவிட்டாயடி,
காணாமல் போன என்னை
உன்னுள் பார்த்துவிட்டேனடி..

எழுதியவர் : பிரதீப் (18-Apr-13, 4:04 pm)
Tanglish : kaadhal parvai
பார்வை : 924

மேலே