இசைந்திடுவோம் மானிடரே
உண்டு உறங்கிடவும் -வயிறு
உப்பி அலைந்திடவும்
கண்டு காணாமலே -உலக
வாழ்வை நடத்திடவும்
மண்டு அறிவாலே -உயிர்
விரயம் செய்திடவும்
வாய் கிழிய -வெட்டி
கதைகள் பேசிடவும்
வாசா ஞானியை -போல்
தத்துவம் கக்கிடவும்
வந்து பிறந்தேனோ -வந்த
வேலை மறந்தேனோ !!!!!!!!
வானவில் வாழ்க்கையடா -மழை
காலத்தில் தோன்றுமடா
விண்ணை அளந்ததாக -நீயும்
பீற்றி கொள்வாயடா
ஆணவ போதையிலே -அரை
நொடியில் முடிவாயடா
ஒளியின் ஆற்றலடா -அது
இறையின் ரகசியமடா
ஆற்றலை அறியாமலே -நீ
ஆணவம் கொண்டாயடா
ஆற்றலை அறிந்துகொண்டால்
ஆணவம் அழியுமடா
ஆணவம் அழிந்தபின்னால்
அன்பு பெருகுமடா
அன்பு பெருகிவிட்டால்
ஆனந்தம் பொங்கும்டா
சுதந்திர காட்டினில்தான்
பறவைகள் பெருகுமடா
ஆனந்த மனத்தினில்தான்
அந்த ஞானம் ஜனிக்குமடா!!!!!
இயன்றவரை
இயம்பிவிட்டேன்
இவ்வாழ்வு
ஈசலின் வாழ்வாகும்
இன்பத்தை அணைத்து
இசைவோடு வாழாமல்
ஈனமான ஆணவத்தில்
இன்னுயிரையெல்லாம் நோவாக்கி
இவ்வுலகில் கண்டதென்ன
இசைந்திடுவோம் மானிடரே
இச்சையை சீரமைத்து
இம்சையின்றி வாழ்ந்திடுவோம் !!!!!!!
************************************************************
அன்புடன்
கார்த்திக்