எழு தமிழா!!
சாதி எனும் தீயில்
நம் சுதந்திரத்தை எரித்து
குளிர் காய்கின்றனர்
அரசியல் பாதகர்கள்..
ஆட்சியில் அமர
சாதிக்கு சின்னத்தை வகுத்து
நம் ஒருமைபாட்டை
சிதைத்துவிட்டனர்
எழு தமிழா!
இனி நம் பேணா முனை
பேசட்டும்
சாதிவெறி
மிருகங்களை
விரட்டியடிப்போம்
தமிழகத்தை விட்டு...
சாதியில்லா
தமிழகம் அமைத்து
சமத்துவத்தோடு வாழ..
நம் பேணா முனை பேசட்டும்
எழு தமிழா!!