காதல் அழிவதில்லை
உனக்காக நான் இருக்கிறேன் என்றாய்
அப்போது எனக்கு வேறு யாரும் தேவைப்பட வில்லை
உனக்காக நான் இருக்கிறேன் என்றேன்
அப்போது உனக்கு வேறு யாரும் தேவைப்பட வில்லை
நமக்காக யாருமே இல்லையே என்றிருந்தோம்
நம் உண்மைக்காதலை உணராத உள்ளங்களுக்கு உணர்த்தவந்த சொந்தமடி இந்த பந்தம் நம் குழந்தை.