கண்ணா நீ வருவாயா

நானறிந்த புரிதலை விளம்புகிறேன் கண்ணா
இக்கால சாத்தியம் விளம்புகிறேன்
கீதை சொன்னவனே நீ எனக்கருள்வாயோ
வந்து எனக்குள் புகுவாயா !!!!!
வானம் ஒன்றே கண்ணா
இன்று தெரிந்திடும் நட்சத்திர கூட்டம்
நாளையும் தெரியுமா மணிவண்ணா
மூச்சை அடக்குவதால்-காற்றுக்கு
நுரையீரல் ஏங்காதா கண்ணா !!!!
இயல்பாக வாழ்வதில்தான்
இன்பம் இருக்கிறது கண்ணா
உலக உயிருக்கெல்லாம்
ஆதாரம் இதுவே கண்ணா
அதை விடுத்து இயம்புவதால்
இம்சை குறையுமா கண்ணா !!!!
போருக்கு மத்தியில்தான் முக்தியை
போதித்தாய் கண்ணா - இது
இயம்பிடும் இடம் இதுவல்ல என்று
போதி மரம் தேடினாயா கண்ணா !!!!
முக்தி விளம்பிடும் தகுதிகள்
எனக்கில்லை என்றும் ,தவத்தினை
நான் செய்ததில்லை என்றும்
விலகி ஓடினாயா கண்ணா !!!!!
விஷயம் பெரியது கண்ணா -அதனை
விளக்கிடும் தகுதிகள் எனக்கில்லையோ
கண்ணா -விளம்பர யுக்திகென்றா இதை
விலை பேச நினைப்பேன் கண்ணா
பெருமை பீற்றி கொள்ள இவ்வளவு
நேரம் ஒதுக்குவேணா கண்ணா !!!!!
ஏழுநூறு ஸ்லோகங்களால் தானே முக்தி
பதியப்பட்டது கண்ணா -பதிக்கப்படும்
கேள்விகளால்தானே விஷயம் புலப்படும்
கண்ணா,என்னை ஒதுக்கி வைப்பதனாலும்
ஓங்கி அடிப்பதனாலும் ஆவதொன்றுமில்லை
கண்ணா-இதில் அதிசயமில்லை கண்ணா !!!!!!
எங்கோ தொலைத்துவிட்டு எங்கோ தேடுவதால்
நாகரீகம் மீண்டிடுமா கண்ணா -மனிதநேயம்
வளர்திடுமா மணிவண்ணா -மனசு கணத்தடா
கண்ணா மதியும் சோர்வடையுதடா கண்ணா
புனிதம் என்ற ஒற்றை வார்த்தையிலே
புனிதத்தை தொலைப்பதில் பயனேது கண்ணா !!!
தலைவலி என்பது அறிகுறிதானே கண்ணா
அறிகுறிக்கு அருந்திடும் மருந்தினால்
தலைவலி தீரலாம் கண்ணா -உறுப்பின்
அசல் அழிந்திடுமே கண்ணா -அதன்
வருத்தம் எனக்குண்டு கண்ணா !!!!
கண்ணா முன்றேழுத்து வார்த்தைக்குள்ளே
முழுஉலகம் சமைத்து வைத்தாய்
கவர்ச்சியுற்று கணித்ததினால்
கவலைகள் பல சேர்ந்ததுவே
கலவரங்கள் கோடி நிறைந்ததுவே
காட்சிகளில் பிழை கண்டோம்
காண்பதெல்லாம் நரகம் என்றோம்
மூன்றெழுத்து ரகசியத்தை
கட்சிதமாய் புரிந்துகொண்டால்
காட்சிகளும் சரியாகும்-இனி
காண்பதெல்லாம் உயர்வாகும்
கண்டதே காட்சி கொண்டதே
கோலமென்று இவ்வூரார் என்
இன்முகத்தில் காரிஉமிழ்ந்தால்
என் செய்வேன் யான் கண்ணா !!!!
ஆர்வமாய் புரிந்ததை செப்பி என்ன பயன்
கட்டிய உரைக்கு வேறு பெயர சூட்ட வருவாயா
கண்ணா-தலைப்பிழந்த பெயருக்கு இன்னொரு
பெயர் வைக்க -இனி உனக்காக மட்டும்
கவி நான் சமைக்க -இந்த கரியவனின் கை
பிடிக்க கண்ணா நீ வருவாயா !!!!
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய !!!!!!