"சட்டம் ஒரு இருட்டறை"

5 வயது சிறுமியை
சாக்கடைக்கிருமியொன்று சிதைத்தது கண்டு!!!
மாறுதடி என் கண்ணீரும் குருதியாய் இன்று....
பூகோள உருண்டையே ஆடிப்போன விஷயம் !!!
25 வயது ஆண் செய்த விஷம் !!!
எத்தனை கண்களில் கண்ணீர் ஊற்று....
இதுதான்,
அந்த பெண்ணின் மீது நாங்கள் காட்டும் மனிதாபிமான பற்று !!!
ஏ காவல்துறையே !!!
அந்த இளைஞருக்கு தூக்கு மேடையை தயார் செய்யுங்கள் ....
இல்லையெனில்,
ஒட்டுமொத்த இந்தியர்களின் தாக்குதலுக்கு தயாராகுங்கள்......
"சட்டம் ஒரு இருட்டறை" என்பது சரிதான்,
நீதி தேவதைக்கு முன்னமே தெரிந்ததுபோலும்
இந்த சாக்கடைகளை சட்டத்தால் சுத்தம் செய்ய முடியாதென்று !!!
அதனால்தான் கண்களை மூடிக்கொண்டாள் ,
அதுவும் துக்கத்தை காட்ட கறுப்புத்துணியால்...
ஆவிபறக்கும் அசிடில் அவனை 1000 முறை போட்டாலும்
எங்களின் ஆத்திரம் அடங்காது.....
5 வயது சிறுமிக்கு நியாயம் கிடைக்கும்வரை
இந்த தீப்பிழம்பும் தணியாது.....
கண்ணீருடன்...
ஜெகன் ஜீ