கர்ப்பிணி
மங்கையாய் பிறந்தவள்
மனம் பூண்டாள்
மகிழ்ச்சியின் பலனாய்
கரு சுமந்தால் .........
சுகமாகவே நாட்கள் நகருது
சுமை நாளும் கூடி வருகுது
பிள்ளையை பார்க்கும் ஆசையினாலே
தொல்லைகள் தாங்கி இன்பம் சுமக்கிறாள் ........
மசக்கையில் வரும் மயக்கம் மறந்தால்
உறக்கம் தவிர்த்து உள்ளம் மகிழ்ந்தாள்
பிள்ளைக்கான பெயரை தேடி
ஆழ்ந்த யோசனையில் அவளும் ஆழ்ந்தால்........
உடற் சோர்வை தூரம் போட்டால்
வயிற்றிலிருக்கும் பிள்ளை தொட்டு
தன்னந்தனியே பேச தொடங்கி
தனிமையிலும் ரசனைகள் கண்டால் ......
வயிற்றில் இருக்கும் அசைவை கண்டு
கணவனோடு ரசித்து நின்றால்
எட்டி உதிக்கும் பிள்ளையின் காலை
எதுவாய் ரசித்து முத்தம் கொடுத்தால் ........
சட்டைகள் தைத்தால்
மெத்தையும் தைத்தால்
பிள்ளையை வளர்க்கும் முறையை கற்றால்
பிள்ளையை பார்க்க ஆசையாய் காத்தால் ......
பத்து மாத காலம் பக்குவமாய் கடந்தால்
பசிமறந்து பாசமாய் வளர்த்தால்
நிறைமாத கர்ப்பிணியாக
நிறைவு செய்தால் கர்ப்பிணி காலம் ......
உயிரை வாட்டும் பிரசவ வலி
துடித்து நெளிந்து வலியால் துடித்தால்
பிறந்த குழந்தையை கையில் எடுத்து
முத்தமிடுகையில் வலியை மறந்தால்
உலகம் மறந்தால் .......
குழந்தையோடு சேர்ந்து
புது பிறவியை அவளும் பெற்றால் .......