நெருப்பு
நெருப்பு,
விளக்கு எறிந்தால் தீபம்
அய்யர் காட்டினாள் தீபாராதனை
எட்டியான் கொடுத்தால் கொள்ளிக்கட்டை ...........
சுட்டெரிக்கும் சுடர்
சூரிய கதிர்கள்
வறுத்தெடுக்கும் வெப்பம்
வற்றிப்போன பூமி ........
கற்பின் மகிமை
கண்ணகியின் தலைவிரி கோலம்
எரிந்தது மதுரை
கோவலனுக்காக .......
ஜாதி தீ
எறியும் குடிசைகள்
எறியும் மனிதர்கள்
என்றும் அடங்காத தீ .........
வரதட்சணை கொடுமை
அடுப்பெரிக்கும் பெண்களை
நெருப்பெரிக்கிறது சிலதினம் .......
மின்சாரம் நின்றுபோச்சு
வீட்டுகூரைகளை சிலநேரங்களில்
பதம் பார்க்கிறது விளக்கு தீபம் .......
ஏழை வீட்டு அடுப்பு
எரிகிறது வயிறு
அணைந்து கிடக்கிறது அடுப்பு .......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
