அன்று நாம் ...இன்று நாம்

இன்று நாம்......
நவீன உபகரணங்கள் எழுத்துக்களை மென்பொருள் மூலம் சேமிக்கவும் திருத்தங்களைத் தேவைகேற்ப குறைவான உழைப்புடன் மாற்றிக் கொள்கின்றோம் .கணினி இப்போது நமக்கு கையில் எடுத்துச் செல்லும் கலைக் களஞ்சியமாக ஆகிவிட்டது.. .....

அன்று நாம் ....

மனிதன் முதலில் மண் மாதிரிகளில் எழுதினான்.. உலகில் முதன் முதலில் எழுதப்பட்ட காவியம் சுமேரியாவின் 'கில்கமேஷ்' பற்றியதுதான் காலம் தண்டி வாழ வேண்டியுள்ளதை கற்களில் எழுதினான். அது அவ்வளவு எளிதானதல்ல. நிறைய உழைத்தால்தான் எழுத முடியும். எனவே சுருக்கமாகச் செய்திகளை எழுதினான். முக்கியமான இடங்களில் மட்டும் அவற்றை பிரதிஷ்டை செய்தான்.

பின்னர் மரத்தின் பட்டையில் எழுதினான்.'பேப்பிராஸ்' என்று பெயர். இந்தியாவில் பனை ஓலையில் எழுதும் பழக்கம் வந்தது. பேப்பிராஸ்சை சுருளாக மடிக்கும் வண்ணம் உருவாக்கினான் . அதற்குப் பிறகு விலங்குகளின் தோள்களைப் பதப்படுத்தி எழுதினான் அதற்குப் பெயர் 'பார்சுமென்ட்'. அதன் பின் மரக் கூழால் காகிதம் செய்தான் .

இன்று குறுஞ்செய்தி வசதி வந்த பிறகு, மின்னஞ்சல் செய்யும் பழக்கம் ஏற்பட்ட பிறகு கடிதம் எழுதுவதே குறைந்துவிட்டது. ஆனால் ,கையில் எழுத்தாணியைப் பிடித்துக் கொண்டு ஓலைகளில் எழுதியது அசாத்திய உழைப்பை உறிஞ்சக் கூடியது . தவறு ஏற்பட்டால் முழு ஓலையையும் தூக்கி எறிந்துவிட்டு வேறொன்றைப் பயன்படுத்தவேண்டும். அந்த ஓலைகளைப் பாதுகாப்பதும் பதப் படுத்துவதும் கடினம். அதனால் அரசர்கள் சில முக்கியமானவற்றை செப்பேடுகளாகப் பதிப்பித்தார்கள்.

அந்தக் காலத்தில் மின்சார வசதி கிடையாது . எதை எழுத வேண்டு மென்றாலும் பெரும்பாலும் பகலில் தான் எழுத வேண்டும் . ஓர் ஓலையை எழுதுவதற்கு நிறைய சக்தி விரயமாகும் . ஆனால்..அந்தக் காலத்தில்தான் இராமாயணம் ,மகாபாரதம், இலியட், ஒடிசி ,திருக்குறள் போன்றவை எழுதப்பட்டன.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (21-Apr-13, 11:05 am)
பார்வை : 92

மேலே