கொல்லைச் செடிகள் ---ம(க)ருத்துவம்.

* சிறு அசைவில் கூட
காற்றில் கலந்துவிட்டு
சுவாசத்தை வாசமக்கும்
திருநீற்றுப் பச்சிலை செடி ...
எவ்வித வாசனை திரவியமும்
இதற்கு ஈடுஇணையாகாது .

* சளி, தலைவலி கரைக்க
துளசி இலை கசாயம் ...
காரச் சுவை மறைய,
ஒவ்வொரு சிறு
உறுஞ்சல்களுக்குமிடையே
கருப்பட்டி கடி ....

* ஒரு துளி தேன் சுவைக்க ,
பல பூக்கள் உறுஞ்சி உறுஞ்சி
வாய் வலித்த ஞாபகங்கள் ..
தும்பைப் பூவை பார்க்கும்
நொடிகளில் ...

* குதிங்கால் வலி நீக்கியம்
எருக்க இலை
சுடுசெய்த செங்கல் மேல்
எருக்க இலை வைத்து
மிதித்து வந்தால் நீங்குமாம் ,
தீராத குதிங்கால் வலி ...

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம். (21-Apr-13, 4:39 pm)
பார்வை : 137

மேலே