எழுத்து தளத்தில் புதியவளாய் நுழைகிறேன்

வண்ண கவிதைகள் - என்னை
வாஞ்சையுடன் இழுத்து வந்தது
நண்பர்களின் உரையாடலில்
பாசம் தெரிந்தது - பக்குவமாய்

நிமிர்ந்த நடை நேர் பார்வை
சிறந்தவை ...புது கவிதை ..
அதிகமாக பார்த்தவை - என
பற்பல பட்டியலில் பயணிக்கிறது

வர்ஷா வின் வர்ணிப்புகள்
ஹுஜாவின் குமுறல்கள்
அபி அக்காவின் ஆழ்ந்த கருத்துக்கள்
ஆயிஷா பாரூக் அனுதாபங்கள்

மணி கண்டனின் வார்த்தை வீச்சுக்கள்
நாராயணின் நறுகென்ற வரிகள்
கிருஷ்ண ஹரியின் கிறுக்கல்கள்
தம்பு இனியவனின் வார்த்தைகள் - என

படித்த இன்னும் படிக்காத - இன்ன பிற
கவிதைகள் கருவாகி என்னை உட்கொண்டன
நானும் முயற்ச்சிக்கிறேன் - உங்கள்
ஆசியுடன் ஒரு சில படைப்புகளை ...

- வெண்ணிலா வினோதினி

எழுதியவர் : வெண்ணிலா வினோதினி (22-Apr-13, 11:10 am)
சேர்த்தது : VENNILA VINOTHINI
பார்வை : 138

சிறந்த கவிதைகள்

மேலே