வித்தியாசம் இருக்கு...
பசிக்கு உண்பவருக்கும்
ருசிக்கு உண்பவருக்கும்
வித்தியாசம் இருக்கு...
களத்தில் இறங்கி
விளையாடுபவருக்கும்,
வேடிக்கைபார்ப்பவருக்கும்
வித்தியாசம் இருக்கு...
கனவுகளில் வாழ்பவருக்கும்
கனவுகளை நிஜமாக்க
உழைப்பவருக்கும்
வித்தியாசம் இருக்கு..
பொழுபோக்காக
எழுதுபவருக்கும்
பிழைப்பிற்காக
எழுதுபவருக்கும்
வித்தியாசம் இருக்கு...
கடமைக்காக வாழ்பவருக்கும்
வாழ்வதே கடமையாக
கொண்டவருக்கும்
வித்தியாசம் இருக்கு...
இருப்பதை எண்ணி
இன்பத்தோடு வாழ்பவருக்கும்
இல்லாததை எண்ணியே கவலையோடு
வாழ்பவருக்கும் வித்தியாசம் இருக்கு...
சொல்லிற்கும்
செயலிற்கும்
வித்தியாசம் இருக்கு...
வாழ்ந்து முடித்த முதியவர்க்கும்
வாழ துடிக்கும் இளமைக்கும்
வித்தியாசம் இருக்கு..
வாழ்க்கையே
ஒரு வித்தியாசம்- அதனுள்
வாழ்ந்து பார்க்கும் நாமும்
ஒருவருக்கொருவர் வித்தியாசமே...
-PRIYA