பிரிந்து சென்ற உறவுக்கு...

வார்த்தைகளையும் நினைவுகளையும் மட்டும்
என்னோடு விட்டு தொலை தூரம்
போய் நிற்கும் உறவே ....

நீ கற்பனை செய்கிற எனக்கான நிலையில்
பொருந்த முடியாமைக்கு வருந்துகிறேன்....!!

நீ அறியாத ஆதிக்கணமொன்றில் நிகழ்திருக்கலாம்
என் இன்றைய நிலை....

நீள் வளையப்பாதையில் இயங்குகிற பூமி
எந்தக்கணத்திலும் நின்று போகலாம்...!!
நின்றதில்லை தான் !! நிற்குமோ!!!???

முயற்சி இல்லாத ஈர்ப்பின் மீது
நீடித்திருக்கிறது என் காதலும் தேடலும்- உறவுகளும் ...

இடவெளிகள் மாறுகிற கணங்களில் நிகழக்கூடுமே
இயங்க மறுக்கும் பூமி!!!

நெருக்கத்திற்கான கடைசித்துளியும் வற்றிவிடாமல்
பாதுகாக்க போராடுகிறேன் - கைக் கொடுத்து
உதவிடு....!!!

- தோழமையுடன் இவள்

எழுதியவர் : இவள் (22-Apr-13, 3:10 pm)
சேர்த்தது : jan.v
பார்வை : 190

மேலே