வறண்டு கிடப்பது வயற்காடு மட்டுமல்ல

குறள் தந்த கவிதை-12

உன் வரவுக்காக
வாய் பிளந்து
பசியோடு கிடப்பது
பயிர் நிலம் மட்டுமல்ல
என் வயிறும்தான்...!

வறண்டு கிடப்பது
வயற்காடு மட்டுமல்ல
என் வயிறும்தான்

மண்ணில்
நீ விழுந்தாலும்
நெல்மணிகளாக
மாறுகின்றாய்...

தண்ணீரில்
நீ விழுந்தாலும்..
குடி தண்ணீராய்
தாகம் தீர்க்கின்றாய்..

மழையே!
என் கண்ணீர் மழையை
காணிக்கை யாக்குகிறேன்
உன் வரவுக்கு
காத்துக்கிடக்கிறேன்
......................பரிதி.முத்துராசன்

கவிதை தந்த குறள்-12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (22-Apr-13, 4:35 pm)
பார்வை : 124

மேலே