என் கவிதைகளும்,அவள் மெய்விழி கருமையும்!

நான் பலநாள்
தனித்து,
தவம்போல் சிந்தித்து,
மூளைகுழம்பி,
முடிவுக்கு வந்து
சிரம்கொண்டு,
என் கரம்கொண்டு வார்த்த
கவிதை வரிகளை யெல்லாம்....
நிமிடப்பொழுதில்
அவள் மெய் விழிகளில்
கிறுக்கிய இரட்டை
கருமைக் கோடுகள்
நொடிப்பொழுதில்
மண்டியிட செய்துவிடுகின்றன!!!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (22-Apr-13, 7:21 pm)
பார்வை : 146

மேலே