முல்லை முகத்தில் வச்ச கல்லு மூக்குத்தி

சின்னச் சின்ன மூக்குத்தியாம்...
கன்னி பெண்ணுக்கு - முக
களை கெட்டும் மூக்குத்தியாம்...
உணர்வுக்கு உற்சாகமாம்
உடலுக்கு புத்துணர்வாம் - தமிழ்
பரம்பரையின் பொக்கிசமாம்
ஒற்றை மூக்குத்தி அணிந்தாலே
ஓய்வின்றி உழைக்கணுமாம் உடன்
ஒய்யாரம் கிடைத்திடுமாம்
வைர மூக்குத்தி அணிந்தாலே
வரிசையாய் வந்து நிற்குமாம்
வகை வகையாய் மாப்பிளைகளாய்
சிறிய மூக்குத்தி அணிந்தாலே
சிந்தனை நம்மில் இருக்குமாம்
சிறப்புடனே எல்லாம் கூடிடுமாம்
கல் மூக்குத்தி அணிந்தாலே
எல்லோர் கண்கள் உங்கள் மீதாம்
கனவுகளும் உங்களை வைத்தாம்..