இதோ முடிந்துவிட்டது ! ! !

இதோ முடிந்துவிட்டது
கனவுகளுடன் தொடங்கிய கல்லூரிக் காலம் ! ! !

பின்னிரவு தூங்கி முற்பகல் எழுந்து
தூக்கத்தை மறந்து, காசை இழந்து
கற்றுக்கொண்ட பொறியியல்
இதோ முடிந்துவிட்டது ! ! !
சொல்லிய நட்பு, சொல்லாத காதல்,
சொல்ல மறந்த நன்றி, கேட்கத் தவறிய மன்னிப்பு
இத்தனையும் சுமந்து வந்த கல்லூரிக்காலம்
இதோ முடிந்துவிட்டது ! ! !

வேகம் கொண்ட ரயிலோன்றின்
கடைசிப் பெட்டியில் செய்த பயணம் கண்ணீர் மல்க
இதோ முடிந்துவிட்டது ! ! !

பிரிவு என்ற சொல்லின் பதம் புரியாமல்
கழித்த கனாக் காலம்
இதோ முடிந்துவிட்டது ! ! !

நதியில் அலைந்த இலையில்
தத்தளித்த எறும்பின் பயணமும்
இதோ முடிந்துவிட்டது! ! !

கொஞ்சம் மதிப்பெண்
கொஞ்சும் நட்பு
நிறைய சேட்டைகள்
வரான்டா சைட்கள்
அத்தனையும் இதோ முடிந்துவிட்டது ! ! !

எதிலும் சிரித்து, அனைத்தையும் ரசித்து
சிலாகித்த நட்புகளின் நெருக்கமான
வசந்தகாலமும் இதோ முடிந்துவிட்டது ! ! !
முடிந்தேவிட்டது ! ! !

எழுதியவர் : Mydeen (24-Apr-13, 10:03 am)
சேர்த்தது : Nizar Mydeen
பார்வை : 525

மேலே