இளமையில் வறுமை ...
இரவை வடிகட்டிய மிச்சத்தில் ஆரம்பாகிறது
இதோ இவனது வாழ்க்கை...
குழந்தைகளை குதூகலமாகவும்
பெரியவர்களை அனுசரையாகவும்
இளைஞ்சர்களை வசீகரமாகவும்
வாரத்தின் முதல் நாளோடு
அடுக்கு குடியிருப்புகளின் எதிரே
ஆரம்பாகிறது - இளநீர் வண்டியோடு ...
சுடசுட தேநீர் அருந்தும்
சிறு பிள்ளைகளின் மீது ஏக்கப் பார்வையோடு ஆரம்பம்..
வாசம் கூட சில நேரங்களில் உணவாகி போகிறது
வாசல் வழி தெரியும் சமயலறை பார்த்து...
அடம்பிடித்து அழுது புரளும்
மாடிவீட்டு பிள்ளையின் கைபிடித்து
பள்ளிகூட வாசல் வரை விட்டு
வெளியே நிற்கிறது
வெறுங்கால்களுடன் சேர்ந்து மனதும்...
எதிர்பார்ப்புகளின் அடுகடுகான ஆசையில்
வாரக்கடைசி மட்டுமே - இவனை
வியாபாரியாக்கி பார்க்கிறது ...
மண்வாசம் கூட ரசிக்க மனமில்லாமல்
மணிகணக்கில் வானத்தை முறைத்துகொண்டிருக்கிறான்
மழை எப்போது நிற்க்கும் என்று ...
இரவை வடிகட்டிய மிச்சத்தில்
ஆரம்பாகிறது - அதே முதல் நாள் ...
அவசரமாக எப்போதும் போகும் அனைவரும்
அரை நொடி நின்று பார்க்கும் அதிசயம்...
புரியாமல் ஒரு முறை திரும்பியவனின் கண்ணுக்கு
சுவரொட்டியின் கிழிசல் மட்டும் புரிந்தது,,,
"முதல் பரிசு பெரும் கவிதைக்கு
முப்பது நாட்கள் இலவச இன்ப சுற்றுலா... "
தலைப்பு மட்டும் தெரியாமல் தொங்கிகிடக்க
கிழிந்த மீதியை மதிய உணவு கூழ் வைத்து
அழகாக்கிய பெருமையில்
வழக்கம்போல கையில் இளநீரோடு....
ஒட்டிய தலைப்பில்
"இளமையில் வறுமை கொடிது "
ஈரம் காயாமலே தெரிந்தது......