எங்கள் வீட்டு மண விழா !
சொந்தங்கள் கூடி இன்று - ஒரு
சந்தோஷ திருவிழா
இறைவனை நாடி இனிதே முடிந்தது
எங்கள் இல்ல மண விழா
தாய் மாமன்கள் முன்னே நின்று
சகோதரிகள் உடன் கலந்து
எளிமையாக நடந்தது இன்று
இறை இல்லத்தில் நிக்காஹ் ஓன்று
பொருத்தமான மண மகன் - இன்னும்
பொறுமையான குணம் என்பார்
ஹபீப் என்ற மண மகளை ஏற்று கொண்ட
நவாப் என்ற எங்கள் வீட்டு மருமகனாம்
பெற்றவர்கள் ஆனந்தமாய் கண் கலங்க
சொந்தங்கள் கூட்டாய் துவா செய்ய
இறைவனின் நாட்டப்படி இனிதே நடந்தது
எங்கள் வீட்டு மண விழா !
ஸ்ரீவை.காதர்.