நிலா

வானத்து வீதியில்
வரும் நிலவே
நீ சித்திரை மாதத்தில்
மட்டும்தான்
அழகாய் தெரிவாயாமே
உண்மையாகவா..?
நான் நம்பமாட்டேன்
இதோ பார்
என் தேவதையும்
வீதியில் வலம் வருகிறாள்
நன்றாக பார்த்து சொல்
நிலவே!
உனக்கு சுயமாய்
ஒளிவிச தெரியாது
இருந்தாலும்,
இரவில் மட்டும்தான்
உன்னால் ஒளிர முடியும்
என்னவள் விழித்தால்தான்
பூமியே விடிகிறது தெரியுமா உனக்கு.