காதலென்றால் காலத்தால் வெளிப்படுத்த வேண்டும் ..!

அவளிடம் பேச
வேண்டிய வார்த்தைகள்
என்னுள் ஒத்திகை பார்த்துக்
கொண்டிருந்தது...!

இதயத்தில்
நினைவுகள் பாசிபோல் படிந்திருக்கிறது
அவளோடு இருந்த பொழுதுகள்
என்னுள் புதைபொருளாக புதைந்து போய் இருக்கிறது ...!!

காதலென்றால் காலத்தால்
வெளிப்படுத்த வேண்டும்
பார்வையோடு மட்டுமிருந்தேன்
கண்ணீரும் கனவுகளும் கசிந்தன
வாழ்நாளும் கரைந்துகொண்டிருந்தது

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (26-Apr-13, 3:54 pm)
பார்வை : 140

மேலே