ஆசை

உன் கையோடு என் கை கோர்த்து தனிமையில் நடந்திட ஆசை...!

உன் தோளில் தலை சாய்த்து
உறங்கிட ஆசை...!

நீ அறியா நேரத்தில் உன் கன்னத்தில்
முத்தமிட ஆசை...!

உன் வாசம் என் வாசமாய்
மாறிட ஆசை...!

உன்னையே நினைத்து
உருகிட ஆசை...!

உன் மார்பில் தலை சாய்த்து உன் இதய துடிப்பை அறிந்திட ஆசை...!

நீ என் மடியில் உறங்கும் போது உன் தலை கோதிட ஆசை...!

ஒரே வண்ணத்தில் ஆடை அணிந்து நாம் வெளியே சென்றிட ஆசை...!

உன் சுவைக்கேற்ப சமைத்து அதை உனக்கு உட்டிட ஆசை...!

உன்னை போன்ற ஒருவனை நம் பிள்ளையாய் பெற்றிட ஆசை...!

உன் சரி பாதியாய் இறுதி வரை
இருந்திட ஆசை...!

கடைசி ஆசை உன் மடியிலே என்
உயிரை விட்டுவிட ...!!!

எழுதியவர் : நான்சி வின்சென்ட் (26-Apr-13, 7:10 pm)
Tanglish : aasai
பார்வை : 192

மேலே