காதலியாக நீ கிடைக்க காதல் தவம் செய்ததோ?

நானும் அவளும் ஒரு
உணவகத்திற்கு சாப்பிட
சென்றோம்.

அப்போது அங்கு
அமர்ந்ததும் அன்றைய
உணவு வகைகள்
பற்றிய ஒரு
அட்டையை என்னிடம்
கொடுத்தார்கள்!

நானோ அவளிடம் "உனக்கு என்ன பிடிக்குமோ
அதையே எனக்கும் சொல்"
என்றேன்.

அதற்கு
"எனக்கு விஷம் தான்
பிடிக்கும், அதையே
உங்களுக்கும் சொல்லவா?"
என்றாள் நமட்டுச் சிரிப்புடன்!

அவள் முகத்தில் உள்ள
அந்த சிரிப்பை நான்
கண்டுகொண்டேன் அவளுக்குத்
தெரியாமல்!!

அதனால் நான் சற்றும்
யோசிக்காமல் அவளிடம்,
"உன் கையால் விஷம் கொடுத்தாலும்
அதை தேநீர் போல்
அருந்துவேன்" என்றேன்.

உடனே...............................
பார்க்கவேண்டுமே அவள்
கண்களில் வந்த கண்ணீரை.

"என்னை மன்னித்து விடுங்கள்"
என்றாள் என்னிடம்!

"ஏன் இப்போது என்ன சொல்லி விட்டாய்?
நான் உன்னை ஏன் மன்னிக்க வேண்டும்?
என்று அவளிடம் கேட்டேன்.

ஆனாலும் அவள்
கண்ணீர் நின்றபாடில்லை.

"ஏன் உன் கண்ணீரை
இந்த உணவுகளின் மீது
சிந்துகிறாய்?

உப்புச் சுவைக்கு பதில்
இந்த உணவுகள்,
உன் கண்ணீரால் இனிப்புச்
சுவை பெறப்போகின்றன"
என்றேன் அவளிடம்.

அதைக் கேட்ட அவள்
களுக்கென சிரித்து விட்டாள்.

அவள் சிரித்ததைக்
கண்டு எங்கள் முன் வைத்த
உணவுகளும் சிரித்தன!

இது யார் சிரிப்பது?
என்று,,,,,,,,,
நான் அவளை பார்க்க?
அவள் என்னை பார்க்க?

முகத்தில் ஆச்சரியங்களுடன்
மீண்டும் சிரிக்க
ஆரம்பித்தோம் அவைகளுடன்
சேர்ந்து,
சாப்பிட வேண்டும் என்பதினையும்
மறந்து!!

எழுதியவர் : messersuresh (26-Apr-13, 6:37 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 161

மேலே