சிறந்தவர்கள்!!!
![](https://eluthu.com/images/loading.gif)
சிறந்த மேய்ப்பாளர்!
நொண்டி ஆட்டை
தோளில் சுமக்கும்
குணம் படைத்தவர்!!!
சிறந்த பெற்றோர்!
தம் பிள்ளைகளில்
ஊனமான பிள்ளையின்
மேல் உயிரினும்
மேலான பாசம்
கொண்டவர்!!!
நல்ல ஆசிரியர்!
மந்த புத்தி
மாணவர்களை அன்போடு
அரவணைத்து அவனுக்கு
புரியும்வரை சலிக்காது
பொறுமையோடு போதிப்பவர்
அவர்கள் தேர்வில்
தோற்றால் தானே
தோற்றதாய் கலங்குபவர்!!!
நல்ல வீரர்!
குருதி பெருக்கெடுத்து
ஆறாக ஓடும்
போரிலும்,எதிரிகளின்
விளைநிலங்கள்,உணவுப்பொருட்கள்,
வீடுகள்,குழந்தைகள்,
பெண்கள்,முதியவர்கள்,
குருமார்கள்,தன்னை
எதிர்க்கதவர்கள் அழிக்காது
தன்னை எதிர்த்து
போரிடும் எதிரியிடம்
மட்டுமே தன்
வீரத்தை காட்டும்
நெஞ்சம் படைத்தவர்!!!
நல்ல எழுத்தாளர்!
தன் கடைநிலை
வாசகனின் மனமும்
நோகாது எழுதும்
திறம் கொண்டவர்!!!
அன்புடன் நவீன் மென்மையானவன்