பேருந்து நிறுத்தம்

நகர சாலை
நல்ல மாலை வேளை

வெள்ளை சுடிதாரில்
கொள்ளை அழகில் ஒரு பெண்

மெல்லமாக வீசிய காற்று
செல்லமாக அவள் சிகையை
சீவிவிட்டது

அப்போதே அவளை நோக்கி
என் மனம் தாவிவிட்டது

வண்ணத்துப்பூச்சி போல
படபடக்கும் கண்கள்
கண நேரமும் இமைக்காமல் போனது

ஏதோ ஒன்று
அவளை என் திசையில் ஈர்க்க,
அவள் என்னை ஒரு நொடி பார்க்க,
மனதோடு காதல் பூ பூக்களானது

அவளையே பார்க்க விரும்பி(ய)
கால்கள் மண்ணோடு வேரூன்றி நிற்ககாலானது

இருவரும் நின்றிருந்த
பேருந்து நிறுத்தத்தில்
வாகனம் ஒன்று
வந்து நிற்ககாலானது.

'ப்ரியா' என்றழைத்த
வாகனத்தில் வந்தவரின் குரல் கேட்டு
அவள் அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டாள்

அப்போதே என் காதலை
காற்றில் இறகாய் பறக்கவிட்டேன்

வேறென்ன செய்ய
வந்து நின்றது 'போலீஸ் ஜீப்'.......

எழுதியவர் : மனசோரன் (27-Apr-13, 1:25 pm)
சேர்த்தது : Srinivasa Gopalan Vedhantha Desikan
பார்வை : 59

மேலே