தந்தை சொல்
பாசம் பிரவாகம் போலே பெருகுதே
வாசம் வீசும் மலர்கள் உன்முகம்
வசப்பட்ட என் வானம் நீ
கூசல் தருமாறு அமைவது உன்மொழி
கங்குலை பிரியா தங்க நிலவும்
குங்கும நிறம் பிரியா குருதியும்
சங்கு பிரியா திருமால் கரமுமாய்
எங்கும் என்னை பிரியாதே நீ
தேகம் உயிர் கொண்டு இருத்தல்
நோக விடாது உன்னை காக்ககவே
போகம் கொலாமையும் சாகாது இருத்தலும்
சாகசம் பற்பல நீசெய்ய காணவே
பரிமேல் வரலும் பல்புரி ஆளலும்
கிரிகள் அன்ன கரிகள் வெல்லலும்
அரியன யாவும் எளியன எனநீ
புரிதல் காண மட்டும் உளன்.