ஆசான்
எங்கள் ஆசிரியரின் இறக்கையிலிருந்து,
உதிரப்பட்ட சிறகுகளாய் -நங்கள்,
இன்னமும் எழுதுகிறோம்!
சிறிதளவு மை ஊற்றி ,
மூடப்பட்ட எங்கள் அறிவுசுடர் ,
இன்னமும் தீராது எழுதுகிறது !
எழுதும் கைகள் வேறனவாயினும்,
எழுதும் எண்ணங்கள் திண்ணமானவை-அது ,
எங்கள் தீரரிடமிருந்து வந்தவை !
அத்தனைக்கும் பிள்ளையார் சுழி ,
எங்கள் ஆசானின் அமுதமொழி ,
"கனவுகள் மெய்படும் "!
அதிகாரமற்ற அப்பா அவர் ,
கொஞ்ச தெரியாத அம்மா அவர் ,
சண்டையிட சகோதரன் அவர் ,
இன்னம் பெருமை படுத்த ,
வார்த்தையில்லை என் சிந்தனையில் ,
எத்தனை முறை முறைத்தாலும் ,
முகம் சுழிக்கா நண்பன் அவர் !
எல்லா துறைக்கும் ஆசான் உண்டு ,
எல்லோருக்கும் ஆசான் உண்டு ,
அவன் அம்மாவாக இருக்கலாம்-அல்ல
அவன் தலைவனாகும் இருக்கலாம் !
ஆசான்,
எங்கள் சிம்மாசனத்தை உருவாக்கும் ,
தச்சு தொழிலாளி ,
அவன் தச்சு வேலை பார்ப்பது ,
நம் அறிவினிலே ,
என்பதை மறவாதிருப்போம் !
என்றும்,
நட்புடன்,
அன்புடன் ,
சத்யாசிம்பு