யாரிடம் கற்றுக் கொண்டார்கள்?
தேனியிடம்
............தெரிந்து கொள்
நம்மை மட்டும்
உறிஞ்சுவதில்லை
தேனீக்கள் .....!
பூனை அணில் மானிடம்
.........தெரிந்து கொள்
தீய செயல் கண்டு
ஓடி ஒதுங்குவது
எப்படி என்று ....!
உடும்பிடம்
........தெரிந்து கொள்
கொண்ட முயற்சியில்
நம்பிக்கை கொள்வது
எப்படி என்று ....!
ஒட்டகத்திடம்
........தெரிந்து கொள்
பாலைவனத்திலும்
நீரில்லாமல் உயிர்
வாழ்வது எப்படி என்று ...!
காக்கை குருவிகளிடம்
.......தெரிந்து கொள்
கூட்டுக் குடும்பமாக
வாழ்வது எப்படி என்று...!
நன்றி உள்ள நாயிடம்
........தெரிந்து கொள்
அன்பு கொள்வது
எப்படி என்று ....!
பெரிய யானையிடம்
.......தெரிந்து கொள்
பிறரை ஆசீர்வதிப்பது
பிறரை மதிப்பது
எப்படி என்று ...!
ஓடும் குதிரையிடம்
.......தெரிந்து கொள்
கொண்ட கொள்கையில்
குறிக்கோளாய் இருப்பது
எப்படி என்று ...!
இந்த வாயில்லா
ஜீவன்களெல்லாம்
யாரிடம் தான்
கற்றுக் கொண்டார்கள் ....?!