துடிப்புடன் எழுவாய்
துடிப்புடன் எழுந்திடடா...... மனிதா நீ
துன்பம் துறந்திடடா ......உன்
வாழ்க்கையில் முன்னேற- நீ
வாளாய் இருந்திடடா....
சாதிக்கும் செயல் பலஉண்டு
சாதனை உனக்கு கற்கண்டு
மனிதனின் வாழ்வும் மலர்வதுண்டு
அவனிடம் தன்னம்பிக்கை என்னும்
பலமுண்டெனில் எதிர்காலம் அவன்
கைவசமுண்டு ........அதனால்
மனிதா! துடிப்புடன் எழுந்திடடா........நீ
துணிச்சலாய் வாழ்ந்திடடா.........
@@@வைதீகா@@@