காதல்

காதல் -
ஒரு அதிசயக் கண்ணாடி
அதை -
அணிந்து கொண்டு பார்த்தால்
இந்த அகிலமே
அழகாய்த் தோன்றுகிறது .
ஓரப்பார்வை கூடத்
தூரப்பார்வை யாய் இருந்தாலும்
துல்லியமாய்த் தெரிகிறது .

காதல் -
ஒரு அதி நவீன அலைபேசி .
பேட்டரியுமில்லாமல்
சிம்கார்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும்
பேசிக் கொண்டேயிருக்கலாம் .

காதல் -
ஒரு கணிப்பொறி .
வன்பொருள் தவிர்த்து
மென்பொருளாய் நிறைந்த
மின்னல் உலகை
கொண்டு வரும்
ஜன்னல் பலகை .

காதல் -
ஒரு விமானம் போல .
கைக்கெட்டும் தூரத்தில்
மேகங்கள் மிதந்து
கொண்டிருக்கும் .
நமக்கருகே சில தேவதைகள்
நடமாடிக் கொண்டிருப்பார்கள் .
அமர்ந்து கொண்டுதான் இருப்போம்
ஆனால் உண்மையில்
பறந்து கொண்டிருப்போம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Apr-13, 1:27 pm)
Tanglish : kaadhal
பார்வை : 102

மேலே