இப்படி இரு
கொள்கையை
உடும்பு பிடியாய் பிடி
சிறுத்தையின் வேகத்தை
உழைப்பில் காட்டு ......
யானையின் பலத்தை
உடலில் கொள்
நரியின் தந்திரத்தை
வாய்ப்புகளில் காட்டு ............
முயலின் அலட்சியத்தை
ஓரம் போடு
ஆமையின் அறிவை
மனதிற்குள் போதி............
நாயை போல்
நன்றியோடு இரு
பாம்பைப்போல் மெல்ல ஊர்ந்து
சாதனையை எட்டிப்பிடி .......
இலக்குகளை
கழுகாய் கவனி
லட்சியத்தை நோக்கி
பீலிக்ஸ் பறவையாய் பற.......
தேனீயாய்
சுறுசுறுப்பாய் இரு
சிட்டுகுருவியாய்
சுதந்திர வானில் சிறகடி .....
சிங்கத்தைப்போல்
எதிரியை விரட்டு
எதிலும் நீ
தலைமை கொள்
முதன்மையாய் நில் ........