பாரதி கண்ணம்மா

அன்பை போற்றவேண்டிய
மனித உறவுகள்
வம்பை வாங்குது
ஜாதி வெறியால் ..........

மனித உறவுகள்
பிரிந்து வாழ்ந்து
ஜாதிப்பகையால்
சண்டைகள் இடுது ............

காதல் தீயால்
இணைந்த இதயங்கள்
ஜாதி தீயால்
எரிந்து மடிகின்றன ........

கொஞ்சும் காதலை
கொச்சை படுத்துது
நெஞ்சை அடைக்கும்
கொடுமைகள் செய்யுது ........

உயிர்களை துச்சமாய்
என்னி கொல்லுது
உணர்வுகளை அறவே
வெறுத்து ஒதுக்குது ........

இளசுகள் காதல்
ஏக்கம் கொள்ளுது
ஏனோ மக்கள்
இதை ஏற்க மறுக்குது ........

படம் பார்த்ததால்
மனம் கலங்குது
பதை மாற
மனம் மறுக்குது ...............

ஊருக்கு ஊர் பாரதி கண்ணம்மா
தெருவுக்கு தெரு ஜாதியால் சண்டையடி
மனதிற்கு மனம் மாறாத வடுக்கள்
என்று மாறும் மனித மனங்கள் ..........

எழுதியவர் : வினாயகமுருகன் (29-Apr-13, 12:59 pm)
பார்வை : 120

மேலே