அறுத்தெறி...

அறுத்தெறி...
-------------
ஐந்து அறிவு உயிரினமும்
அன்னை கற்றுத் தர
அன்பு பாடம் பயில்கிறதே...

துயர் வெள்ளம் சூழும் நேரம்
துடுப்பாய் உயிரும் படகாய் மெய்யும் மாறி
துன்பம் துடைக்கிறதே...ஐந்து அறிவு உயிரினமும்
துணையாய் நின்று வாழக் கற்றுத் தருகிறதே...

காண்கிறேன் உலகில் அன்பின் வடிவமாய் அன்னையை...
எனைப் பெறவளே நீ கண்டதோ
கேட்டதோ இல்லையோ மெய் அன்பை...

ஆறறிவு உயிராம் என் தாயே
பொய் காதலுக்கு மெய் தந்து
கருவில் எனைத் தாங்கி
மெய் அன்பை பொய் ஆக்கி
வீசி விட்டாய் எனை குப்பைமேட்டில்....
நீ கருவில் தாங்கிய பாரத்தை
வேறொருவர் ஏற்று வளர்க்கட்டும் என
நினைக்காமல் கருவறையைக் கல்லறையாய்
மாற்றிஇருக்கலாம்....அறுத்தெறி உன் கருவறையை...
இனியேனும் குப்பைமேட்டிற்குத்
தத்தாகும் மழலையைச் சுமக்காதே...
தாய்மைப் புனிதத்தைக் கெடுக்காதே!!!

---- நாகினி

எழுதியவர் : நாகினி (29-Apr-13, 12:56 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 99

மேலே