நரகத்தை தந்தாலும்

விழி நீரில் உள்ளம் நிறைகின்றதே.
வழிந்தோடி உயிரில் உறைகின்றதே.
உறவென்று சொல்ல நீ வந்த போதும்.
பிழையான சொல்லால் உடைந்தேனே நானும்.
மனம் ரெண்டுமிங்கு ஒன்றான போதும்
ஊரின்று தடுக்க கண்ணீரில் நானும்.

அன்பான உள்ளங்கள்;பறிமாறும் இதயத்தில்
சேர்ந்திங்கு வாழ விதி வேண்டுமே.
தடையேதுமில்லாமல் பிழை யாரும் சொல்லாமல்
மெய்காதல் உலகொன்று இனி வேண்டுமே.
உயிர் கொஞ்சம் கிழித்து உணர்வெழுதும் காதல்
பொய்த்தொன்றும் போகாத நிலை வேண்டுமே.

அன்பென்ற சொல்லிற்கு அர்த்தங்கள் தெரியாத
உயிர் மாண்டாலும் பிழையில்லையே.
உயிர் தந்த காதல் பிழையென்று சொன்னால்
உன் உயிர் தாங்கும் உயிருக்கு வழியில்லையே.

நரகத்தை தந்தாலும் காதல் சொர்க்கம்.
நீ பிழையென்று சொன்னாலும் நாம் காதல் வர்கம்.
இந்த நிலைபாடு மாறாது என்றும் எதற்கும்.
அது மரித்தாலே அப்போது உலகம் நிற்கும்.

எழுதியவர் : கவிசதிஷ் (6-Apr-10, 2:56 pm)
பார்வை : 1977

மேலே