எதிர் நீச்சலும் புத்திசாலிதனமும்

ஆறு பாய்ந்தோடியது
அதிலிருந்து குட்டி குட்டி மீன்களெல்லாம் ஆற்றின் எதிர் திசையில் சிரமப் பட்டு நீந்திக் கொண்டிருந்தன..ஓரடி முன்னே சென்றால் ஈரடி பின்னே செல்கின்றன ...மீன்களால் நீந்த முடியவில்லை ..
இதை கவனித்த கொக்கு ஒன்று மீன்கள் மீது ரொம்பவும் பரிதாபப் பட்டது ..
உடனே சொன்னது...''குட்டி மீன்களே! இங்கு வாருங்கள் ''என்று அருகில் அழைத்தது .
அவர்களைப் பார்த்து சொன்னது ..நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறீர்கள் ...ஆற்றின் எதிர் திசையில் நீந்துவதால் தானே இவ்வளவு சிரமம்?
நீங்கள் ஆற்றோடு போங்கள் நீச்சல் எளிதாய் இருக்கும் என்று ஆலோசனை சொன்னது ..

இதைக் கேட்டவுடன் குட்டி மீன் ஒன்று பளிச் என்று பதில் சொன்னது ...
''நாங்கள் ஆற்றோடு போவதா?''
உங்களுக்கு நல்ல மனசுதான் ...

செத்த மீன்கள் தானே ஆற்றோடு போகும் ..நாங்கள் உயிருள்ள மீன்கள் ...புரிந்து கொள்ளுங்கள் என்றது

அன்பர்களே இக் கதை மூலம் நாம் தெரிந்து கொள்வது ''நாம் எதிர் நீச்சல் போட்டு வாழ்வை வளமாக வைத்துக் கொள்ளவும் உயிருள்ள மீன்கள் பிழைத்துக் கொண்டதையும் உணர்த்திற்று ..

''எதிர் நீச்சலே எங்களின் உயிர் மூச்சு ''

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (30-Apr-13, 12:59 pm)
பார்வை : 329

மேலே