என் காதல் நிலவே

சிறகு கொண்ட நிலவே
சிறக்கும் என் கனவே
உன்னை காணும் ஒவ்வொரு நொடியும்
என் கனவுலகம் சிறகை விரிக்கும்

தாய் உன்னை அறிமுகம் செய்தாள்
தந்தை உன்னை விளையாட்டு பொருளாக்கினார்
பாட்டி உன்னை கதையாக்கினாள்
என் காதலி உன்னை அவளாக்கினாள்

யார் உன்னை எதுவாக்கினாலும்
அதுவாகினாய் உன்னை இழக்காமல்
நான் மட்டும் இன்று நான் இல்லை
உன்னை ரசித்த நாள் முதல்

எழுதியவர் : ருத்ரன் (1-May-13, 11:30 am)
Tanglish : en kaadhal nilave
பார்வை : 78

மேலே