மௌனம்!!

எதிரியை மடக்குதற்கு
ஈட்டி கோடாரி எதற்கு?
மௌனம் போதாதோ!
மனது அழுவதற்கு!
ஏசு புத்தன் காந்தி
இவர்க்கெல்லாம்
இதுதானே இதயம்
ஏந்திய ஆயுதங்கள்!
மௌனம்தான் பொறுமை!
மௌனம்தான் அகிம்சை!
மௌனம்தான் அறிவாண்மை!
மௌனம்தான் சமாதானம்!
சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.