யோசித்தால் யோசிக்க வைப்பவை (4)

எழுதுவதெல்லாம் உண்மைஎன்றால்
அழிப்பானை கண்டுபிடித்திருக்க மாட்டோம் ........

எத்தனை போட்டிகள் உலகத்தில் இருந்தாலும்
இறுதி ஊர்வலத்தில் உனக்கு நிகர் நீயே ..........

பெரிய விஷயம் ஏற்படுத்தும் வலியை விட
சிறிய விஷயம் ஏற்படுத்தும் வலி அதிகம் தான்
குன்றின் மேல் இருப்பதும்
குண்டூசியின் மீதிருப்பதும் ......

கோழி முட்டையிட்டால் குதுகலம்
ஆசிரியர் முட்டையிட்டால் களோபரம்
எங்கள் வீட்டில் நடக்கும் கூத்து ............................

ஆடை கண்டுபிடிக்கும் போது அம்மணமாகத்தான்
இருந்திருக்கமுடியும் ......

இத்தனை தண்ணீர் குடத்துடன் எதற்க்காக
தவிக்கிறது தென்னைமரம் தண்ணீர் வேண்டி
கொளுத்தும் வெயிலில் ..எட்டாத உயரத்தில் .......

கல்யாண சந்தையில் விலைபோகும்
காளை மாட்டிற்கு கன்னியரால் பேசப்படும் விலைதான் வரதட்சணையோ .........................

இறக்கை இருப்பதெல்லாம் பறக்கும் என்றால்
மின்விசிறி ஏன் பறக்காமல் சுற்றுகிறது ........

மன்னவனோ , ஏழையோ மனம்விரும்புவது
ஒன்றுபோல்தான் அட்சயபாத்திரத்திற்காக ..........

ஆணின் வீரமும் , பெண்ணின் மென்மையும் அடிபடுவது குழாயடிச் சண்டையில் ..........

மழையில் மரத்தடியில் ஒதுங்கியது அந்த காலம்
இன்று ஒதுங்க சிறு கையே போதும்
நாளை மின்சார கம்பியே போதும் ....................

தூங்கும் போதெல்லாம் கனவில் நீ
விழிக்கும் போதெல்லாம் நிஜத்தில் என் அப்பன்
இரண்டுமே சரியான இம்சைதான் தூக்கத்திற்கு .......

................................................................... (தொடரும் )

எழுதியவர் : bhanukl (2-May-13, 10:44 am)
பார்வை : 225

மேலே