கவலையின் உரு ஆயிரம்

நெற்றி வியர்வை நிலத்தில் நீராய் சிதற

விதை நெல்லை தூவி விதைக்கும்

விவசாயிக்கு ஒரே கவலை

விளையும் மகசூல் பற்றி

விலைவாசி ஏற்றினாலும் பஞ்சம் தலை விரித்தாலும்

அடுத்து ஆட்சி பிடிப்பதே லட்சியமாய்

அரசியல்வாதியின் கவலை

பேணிவளர்த்த பிள்ளை

பத்திரமாய் வீடு திரும்பும் வரை

நெருப்பை கட்டி பிரசவிக்கிறாள் தாய்

பாதுகாப்பு குறித்து அவள் கவலை

எத்தனை சுமை கண்டபோதும்

சிரித்த முகத்துடன் கையில் இருக்கும்

பணத்திற்கு முழுவதும் கேட்டதை வாங்க

முயலும் தந்தைக்கு முடியாமல் போகும் சோகம்

அவர்க்கு அது பெருங்கவலை

கவலையின் உரு ஆயிரம்

தீர்க்கும் மனம் வலிமை கொண்டால்

தரணியும் தட்டி விளையாடும்

பூ பந்துதான்

எழுதியவர் : ருத்ரன் (2-May-13, 11:35 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 112

மேலே